Description
ஜேம்ஸ் சிந்திக்கும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானது. எதைப் பற்றியாவது ஒரு சிறு பொறி கிடைத்துவிட்டால் போதும், அதைக் கொண்டு அதைத் தன் அறிவின் திறத்தால் ஊதி பாதி தழலாக்கிவிடுவார். அவரின் சிந்தனையைத்தான் பெரிதும் விரும்பினேன். ‘ஒருவரின் சிந்தனை’ என்பது, அவருக்கு உள்ளே இருக்கும் அவரின் உடல்தானே! ஒருவரின் புறவுடலை நேசிப்பதைவிட அகவுடலை நேசிப்பதில்தானே காதலின் ஆழம் தெரியவரும். நான் என் காதலை ஆழமாக்கிக் கொள்ளவே விரும்பினேன்.
சேம்பின் அகவுடலை நான் அவருக்கே காட்ட விரும்பினேன்.
அதனால்தான் நான் அவரிடம், “நீங்க நிறைய சிந்திக்குறீங்க. அதைப் பற்றிப் பிறரிடம் நிறையவே பேசுறிங்க. அப்புறம் அதெல்லாம் அவ்வளவுதானா? அதை ஏன் நீங்க விரிவா எழுதி வைக்கக் கூடாது. எழுதி வைச்சாத்தானே அது காலத்துக்கும் நிற்கும்!” என்றேன்.
பொதுவாகவே, ஜேம்ஸ்க்கு எழுதுவதில் விருப்பம் இல்லை . அவர் தன்னுடைய சிறுவயதில் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், புதுமையாகவும், விரிவாகவும் சிந்திக்கத் தொடங்கிய பின்னர் அவரின் விருப்பம் எழுதுவதிலிருந்து, விலகிவிட்டது. நான் அவரை எழுதவைக்க விரும்பினேன். நான் அவரிடம், “உங்களின் ஒவ்வொரு சொல்லையும் நான் கேட்க மட்டும் விரும்பவில்லை; படிக்கவும் விரும்புகிறேன்” என்றேன். அவர் பதில் ஏதும் கூறவில்லை . மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்தார். மறுநாளிலிருந்து எழுதத் தொடங்கிவிட்டார்.
Reviews
There are no reviews yet.