Description
“நாம் உருவாக்கும் அனைத்தும் இயற்கைதான். நாம் உருவாக்கும் அனைத்துக்கும் அடிப்படைக்காரணமாக இருப்பதும் இயற்கைதான். எல்லாமே இயற்கையின் அடித்தளத்திலிருந்து எழுப்பப்படுகிறது. ஒவ்வொருவரின் கனவும் கற்பனையும் இயற்கையில்தான் காலூன்றியுள்ளது. இயற்கையன்றி வேறு எதுவும் இந்த உலகில் நிலையானது அல்ல. இயற்கையும் அழியும்தான். ஆனாலும் அது மீண்டும் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு உருவாகும். எரிமலைக் குழம்பில் அழியும் மலைச்செடிகள் தம்மை மீண்டும் தளிர்க்கச் செய்துகொள்கின்றன. காட்டுத் தீயால் சாம்பலாகும் காடு தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்கிறது. இயற்கைக்கு அழிவில்லை. நாம் இயற்கைக்குச் செய்யும் ஒவ்வொடு துரோத்துக்கும் இயற்கை தம்முடைய எதிர்வினையாய் புன்னைகையே தருகிறது. ஒருகட்டத்தில் இயற்கை எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டு, நம்மைப் பார்த்து புன்னகை புரியும். இயற்கையின் புன்னைக்குப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும் இயற்கையின் புன்னகைதான். அதுதான் 333 புனைவும் மறுக்கபடுரைகளm இந்தப் புத்தகத்தின் வழியாக மலர்ந்துள்ளன. இயற்கையின் புன்னகையைப் புரிந்துகொள்ள இவை உங்களுக்கு உதவக்கூடும்.” – பதிப்பாளர்.
Reviews
There are no reviews yet.