Description
தமிழகத்தை சேர சோழ பாண்டியர்கள் மட்டும் தான் ஆண்டார்காளா..? இல்லை. தமிழ் வரலாற்றில் மறைக்கப்பட்ட மன்னர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவன் தான், வேங்கட நாட்டை ஆண்ட கள்வர் கோமான் புல்லி. கள்வன் என்றும் களப்பிரர் என்றும் பல வரலாற்று அறிஞர்களால் தூற்றிடப்படும் இவன் தமிழ் மன்னனாக இருந்து, தமிழகத்தினுள் நுழைந்திடத் துடித்த வடுகர்களிடம் இருந்து தமிழ் மண்னைக் காத்திட பெருமையையும், வேங்கட நாட்டின் சிறப்பினையும், பாண்டியர்களுக்கும் வேங்கட நாட்டு புல்லிக்கும் இடையே நடைபெற்ற பெரும் யானை வணிகத்தையும் கதைக் கருவாக கொண்டு, அகநானூற்றில் இருக்கும் பாடலைத் துணையாகக் கொண்டு இயற்றப்பட்ட பெரும் வரலாற்று காதல் காவியம் தான் இந்த “புல்லியின் கள்ளி”,