Description

வெய்யோனின் வேந்தன் (தீயவன் எனத் தூற்றப்படும் தூயவன் ) – (வரலாற்று நாவல்)

எனது ஊரில் திருவிழா காலங்களில் நடத்தப்படும் கூத்துகளை பார்த்து முதன்முதலில் இராமயணத்தை அறிந்து கொண்டேன் . அந்த நாடகங்களில் சிதையை இராவணன்  கடத்தி சென்று இலங்கையில் சிறை வைத்தாலும் அவளுக்கு சிறு துன்பம் தரும் செயலை செய்யாமலும் அவளது கற்பிற்கு சிறு இழுக்கும் உண்டாக்காமலும் அதே சமயத்தில் தனது ஒழுக்கத்தினால் இராவணன் எனது சிந்தனையில் ஆசனமிட்டு நாயகனாக அமர்ந்துகொண்டார்.

ஒரு அரசன் தனது ஆட்சிக்கு உட்பட்ட தனது நாட்டில் தன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற அதிக ஈரம் கொண்டிருந்தும் சீதையின் கற்பிற்கு கடுகளவும் பங்கம் விளைவிக்காமல் கண்ணியம் காத்த இராவணன் எனக்கு நாயகனாக தெரிந்தார். என் மனதிலும் மதியிலும் நாயகனாக தோன்றிய இராவணனை இவ்வுலகிற்கும் நாயகனாக காண்பிக்க வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடே ‘ வெய்யோனின் வேந்தன் ‘ என்ற இப்புதினம்.

Additional information

Weight 1 kg
Author

Publication

SEETHAI PATHIPPAGAM