Description
உண்மை வரலாற்றின் அடிப்படையில் தம் கற்பனைத் திறம்கொண்டு பாவேந்தர் ஆக்கிய நாடகநூலே பிசிராந்தையார். சங்க இலக்கியப் புலவர்களுள் நரை திரை மூப்பு இன்றிப் பல்லாண்டு வாழ்ந்த நற்றமிழ்ப் பெரியார் பிசிராந்தையார். இவர் பாண்டியன் அறிவுடை நம்பியின் அரசவைப் புலவர். கோப்பெருஞ் சோழனின் ஆருயிர் நண்பர். இவ்வாறு பாண்டிய சோழ மன்னர்களால் பெரிதும் மதித்துப் போற்றப்பெற்ற இச்சான்றோர் பாடிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகிய சங்க இலக்கியத் தொகை நூல்களில் காணப்படுகின்றன. கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையாருக்குமான நட்பு ஒருவரைப் பற்றி ஒருவர் பிறர் வாயிலாகக் கேட்டு வளர்ந்த நட்பு. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிர் துறக்க முற்பட்டபோது தன் நண்பன் பிசிராந்தையாரும் தன்னுடன் வடக்கிருக்க வருவார் எனக் கூறியதற்கேற்ப, பிசிராந்தையாரும் வந்த சுவைமிகு வரலாற்றை தன் கவித்துவம் சார்ந்த நடையில் காவியமாக்கித்தந்துள்ளார் பாவேந்தர்.







Reviews
There are no reviews yet.