Description
எட்டாம் திருமுறை மாணிக்க வாசகரால் படைக்கப்பட்டது. திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறைப் படைப்புகளாகும்.
பக்தி இலக்கியக் காலம் என்னும் அளவிற்குப் பரந்து விரிந்து கிடக்கும் பக்தி இலக்கியப் பரப்பில் மாணிக்க வாசகரால் படைக்கப்பட்ட திருவாசகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக எழுந்தருளி மாணிக்க வாசகரை ஆட்கொண்டான். அவரது மனத்தில் இறைவனை அடைய எழுந்த பக்திப் பெருக்கின் விளைவாக உருவான படைப்பு திருவாசகம். படித்தோரைத் தன்பால் இழுத்து மனத்தை உருகவைக்கும் திருவாசகம் தமிழ் மொழியின் இணையற்ற படைப்பாகும்.




Reviews
There are no reviews yet.