Description

ஆண்டவனையும், அரசனையுமே மையமாகக் கொண்டு நடிக்கப்பட்டு வந்த நாடக உலகில் சமுதாயத்திலுள்ள அநீதி,
கொடுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டி நாடகங்களை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் நாடகங்கள் நாடக உலகில் புதிய வேகத்தையும், துரித எழுச்சியையும் ஊட்டின. அண்ணாவின் நாடகங்களுள் “வேலைக்காரி” எனும் இந்நாடகம் சிறப்புபெறும் ஆக்கமாகும்.
பணமே அனைத்தும் என நினைக்கும் வேதாசல முதலியார், பணத்திமிர் படைத்த அவர் மகள் சரசா, வேலைக்காரி மீது இரக்கம் காட்டும் அவர் மகன் மூர்த்தி, வேலைக்காரி அமிர்தம், அவ்வூரினில் வாழும் சுந்தரம்பிள்ளை, அவரது மகன் ஆனந்தன், ஆனந்தனின் நண்பன் மணி ஆகியோர் இந்நாடகத்தின் முக்கிய கதைமாந்தர்கள். வேலைக்காரிக்குச் சரசா செய்யும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டும் அண்ணா, வேலை செய்பவரை அடிமையாக எண்ணும் சமுதாயத்தை உலகிற்குக் காட்டி, அதனோடு ஏழையின் கண்ணீர், சாதி வேறுபாடு, போலி வழிபாடு, பணக்காரர் ஆதிக்கம் ஆகியவற்றையும் இந்நாடகத்தில் குறிப்பிடுகிறார். வீட்டிற்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாக மதிக்காது, இழிவாக நடத்திய காலத்தில், வேலைக்காரிக்கு மதிப்பைத் தேடித்தந்ததோடு, அந்த இனத்துக்கே உயர்வையும் தேடித்தந்தவர் அண்ணா. `பணம்தான் பெரிது’ என்று நினைப்பவர்க்குச் சரியான சவுக்கடியைக் கொடுக்கிறது இந்நாடகம்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

SEETHAI PATHIPPAGAM

Book Type

Paperback

ISBN

978-93-89707-74-8

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.