Description
சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார், பாரதிதாசன் காலம் வரையிலான பல்வேறு இலக்கியங்கள் குறித்த வெவ்வேறு
பொருண்மையில் அமைந்த 14 கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. இவற்றுள் நாட்டுப்புறப் பாடல்களில் நம்பிக்கை, சிங்கப்பூரில் தமிழ் மொழி, சிங்கப்பூர் சிறுகதைகள் போன்ற கட்டுரைகளும் அடங்கியுள்ளன.
ஐங்குறுநூற்றில் அகத்திணைக் கூறுகளைை விளக்குவதோடு, இப்பாடல்களின் ஆசிரியர்களது ஆளுமை திறன்களையும்
விளக்குவதாக முதல் கட்டுரை அமைைந்துள்ளது. சங்ககால பெண்கள் நிலையை விளக்கும் கட்டுரை, பெண்களின் அரசியல் அறிவு பற்றிக் கூறியுள்ள அதே நேரத்தில், பெண்கள் பரத்தமை ஒழுக்கம் ஒழுகிய நிலையையும், உடன்கட்டை ஏறிய நிலை பற்றியும் குறிப்பிடுகிறது. அற நூல்கள், காப்பியங்களுக்கு முன்னோடியாக அமைந்த சிலப்பதிகாரம்,
மெய்ப்பொருள் நாயனார் புராணம் மூலம் திருத்தொண்ட புராணத்தின் சிறப்பு, பல்லவர்கள் கால கலைகள், பாரதி, பாரதிதாசன் கவிதை சிறப்பு எனப் பல்வேறு தமிழ் இலக்கியங்களின் அகன்ற பரப்பின் சுவையை இந்நூலில் சிறு சிறு கட்டுரைகளாக வடித்துள்ளவர் முனைவர் ஞானம்.








Reviews
There are no reviews yet.