Description

சோழத்தாண்டவம் (வரலாற்று புதினம் )

சோழ கேரளன் என்ற மனுகுலகேசரி சோழ மாமன்னன் ராஜேந்திர சோழனின் மகன். ஆனால் சோழர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல வரலாறுகளில் இவன் வரலாறும் ஒன்று.  இளவரசுப் பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் மட்டும் பதவியில் இருந்தான்.  அதில் மூன்று பெரும் போர்களை நிகழ்த்தி வெற்றியும் பெற்றுள்ளான்.  சேர நாட்டின் மீது படையெடுத்து வென்று சோழ கேரளன் என்ற பட்டம் பெற்றான்.  அடுத்து இலங்கைக்குச் சென்று பாண்டிய மன்னன் ராஜசிம்ம பாண்டியன் சோழன் பராந்தகனிடம் தோற்று இலங்கைக்கு தப்பிச் சென்று தனது மணிமுடியையும், வீரவாளையும் இந்திரன் அளித்த இரத்தின ஆரத்தையும் இலங்கை மன்னனிடம் கொடுத்துவிட்டு பிறகு சேர நாடு சென்று இறந்து விட்டான்.

அந்த மணிமுடியையும், வீரவாளையும், இரத்தின ஆரத்தையும் திரும்பவும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக பல சோழ மன்னர்கள் சுமார் நூறு ஆண்டுகளாக இலங்கை மீது போர் தொடுத்தும், தோற்று ஓடிய இலங்கை மன்னர்கள் அவற்றை ஒரு இடத்தில் ஒளித்து வைத்து விட்டதால் சோழர்கள் மீட்க முடியாமல் போனது.  அவைகளை மனுகுலகேசரி என்னும் சோழ இளவரசன் தனியாக சென்று ஒளித்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டு தந்தையின் படைகளை அழைத்து வந்து மீட்டெடுத்து தந்தைக்கு காணிக்கையாக்கினான்.

Additional information

Weight 0.52 kg
Author