Description
குலசேகர ராஜா (வரலாற்று நாவல்)
நெல்லைச் சீமையில் உலாவரும் பல மன்னர்களின் வரலாறுகள் கதை பாடல்களாகவும் வில்லுப்பாட்டாகவும் பாடப்பட்டு வந்து இன்று பல கதைகள் அளிக்கப்பட்டுப் போயின.
பேராசிரியர் வானமாலை அவர்கள் தொகுத்துத் தந்த ஐவர் ராஜாக்கள் கதை என்ற கதைப்பாடல் அப்படி ஒரு நூலாக எனக்குக் கிடைத்தது. அதில் நெல்லை நகரின் சுற்றுப்புறங்களை ஆண்டு வந்த ஐந்து மன்னர்களின் வரலாறு தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கதைப் பாடலாகத்தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் வள்ளியூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகரராஜா என்ற மன்னரின் வரலாறு மிகவும் என்னை கவர்ந்தது. அவரின் வாழ்கையில் காதலும் வீரமும் போட்டி போட்டுக் கொண்டு அணிவகுத்து நின்றன.
அதிலும் கன்னடிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளவரசி அவரின் ஓவியத்தைப் பார்த்தே காதலித்து அவரையே மணக்க வேண்டுமென்று தன் தந்தையிடம் கூறி, அதற்காக நடந்த போராட்டங்களும் காதலும் வீரமும் நிறைந்த வரலாறுதான் குலசேகரராஜா என்ற இந்த நாவல்.