Description
வெற்றித் திருமகன் வீரபாண்டியன் (வரலாற்று நாவல்)
“பொருளா? வெறும் பொருளா அது? எம் குலத்தின் வீரமய்யா அது. எம் மண்ணின் மானம் அது. வெறும் வாள் அல்ல அது. எம் அடையாளம். கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாரதர் என ஐந்து அரசர்களையும் ஒரே இடத்தில் குடமூக்குப் போரில் வென்று மண்டியிட வைத்த மாவீரனின் வாள் அது. சேரத்தினை காலில் விழவைத்த வீரவாள் அது. ஆனூர்ப் போரில் பல்லவ வேந்தனை மிரளவைத்த வாளய்யா அது. இவை அத்தனையும் தாண்டி, பேராற்றலோடு விளங்கிய ஈழத்தரசன் சேனனை, அவனது இடத்திற்கே சென்று களமாடி அலறவைத்ததோடு, ஈழத்தின் செல்வங்கள் அத்தனையையும் கொண்டுவந்து பாண்டிய நாட்டில் கொட்டித் தீர்த்த சீவல்லப பாண்டியரின் உடைவாளய்யா அது. ஈழத்தின் இளவரசனை காலத்திலேயே சிரமறுத்து வீசியதும் அந்த வாள்தான்.
இதக் கூறும்போதே ஆவேசப்பட்ட சடையனாரைக் கண்டு, மெய்சிலிர்த்துப் போய் நின்றான் வீரபாண்டியன்.
Reviews
There are no reviews yet.