Description
ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.
மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாப்பாத்திரமாக அவள் விளங்குகிறாள்.
அந்த மங்கம்மாளை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், செய்திகளையும் ஆராய்ந்ததன் விளைவே இந்தப் புத்தகம்.
மங்கம்மாளை மட்டுமே முக்கியக் கதாப்பாத்திரமாக ஏற்காமல் நாயக்கர் வரலாற்றை விவரிக்கப் புகுந்திருந்தால் இந்நாவல் ஒருவேளை இதைவிடவும் பெரிதாக அமைந்திருக்கக்கூடும்.
கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதிதான்.