Description
பழைமையும் வளமையும் இளமையும் இனிமையும் எளிமையும் கொண்ட தமிழ் மொழி வழங்கியதாகக் கருதப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் காலத்துத் தமிழ்நாடு பல கடல் கொள்களால் அழிந்து சிதைந்து இன்று காணப்படும் நிலப்பகுதியாகச் சுருங்கி இருக்கிறது. இதனை உணருந்தோறும் நெஞ்சம் பதறுகிறது. இன்று காணப்படும் புனித நதிகளை விடப்பெரிய வற்றாத நதிகளும் பல பாகங்களாகப் பிரிக்கப்பட்ட வளநாடுகளும் இருந்ததுடன் இலெமூரியா கண்டம் எனக் கருதப்படும் உயிரினங்களின் தோற்றமாகவும், உலகமொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் தாய் மொழியாம் தமிழ்மொழி தோன்றி நாகரிகத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வளர்த்தது என்னும் பெருங்கூற்றின்
திரட்சியாகவும் விளங்குவது குமரிக்கண்டம் என்னும் கடல்கொண்ட தென்னாடு என்பதை அறிகிறோம். அது உலக உயிரினத் தோற்றப் பண்ணையாகவும் உலகின் நாகரிகத் தொட்டிலாகவும் விளங்கியுள்ளது. அங்குத் தோன்றிய பண்பாடே இன்றைய தமிழர் பண்பாடாக விளங்கும் உலகம் வியக்கும் ஒப்பற்ற பண்பாடு ஆகும். காணாமல் போன புதையலைக் கண்டுபிடிக்கத் தேவையான தடையங்களை முன்னிறுத்துவதாக இந்தநூல் அமைந்துள்ளது.
இந்த அரிய உயர்ந்த தமிழன் உணர்ச்சியோடு பொருந்திய இந்தக் குமரிக்கண்ட ஆய்வுபற்றி முதல் நூல் பன்மொழிப்
புலவரும், பன்னூல் ஆசிரியரும் ஆகிய பன்மொழிப்புலவர் திரு.கா. அப்பாதுரைப் பிள்ளை அவர்கள் செவ்விதின் ஆய்ந்து
வடித்துள்ளார். நினைக்குந்தோறும் இன்பமும் வியப்பும் இனிமையும் தோன்றி மேலிடச் செய்கின்றது.








Reviews
There are no reviews yet.