Availability: In Stock

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காதலி OLLAIYUR THANTHA POOTHAPANDIYAN KATHALI

420.00

Description

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காதலி (வரலாற்று நாவல்)

செந்தமிழ் நாட்டை ஆண்ட சிற்றரசர்களில் சிலர் தமிழின்பால் காதல் கொண்டு, தேனினும் இனிய மொழியை வளர்த்தனர். தமிழில் புலமைக்கொண்ட அத்தகையவர்களை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். அந்த வரிசையில் செந்தமிழ்ப் புலமைப் பெற்று, அதில் மிகச்சிறந்து விளங்கிய மன்னர்களில் ஒருவரான ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் ஒருவன்.

பண்டையக் காலத்தில், பாண்டிய நாட்டின்  வட எல்லைப் பகுதிகளுள் ஒன்றான ‘ ஒல்லையூர் நாடு ‘ தலைசிறந்து விளங்கியது. ஒல்லையூர் நாடு தற்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ‘ ஒலியமங்கலம் ‘ என்னும் ஊரே ஒல்லையூர் என்று அழைக்கப்பட்டது. இந்நாடு மலையரண், காட்டரண், நிலவரண், நீரரண் ஆகிய நால்வகை அரண்களாலும் சூழப்பட்டிருந்தது.

ஒல்லையூர் நாட்டை ஆண்ட பூதப்பாண்டியன் என்னும் ஒப்பற்ற மன்னனின் சரித்திரத்தை, வாசகர்களுக்கு கதைக்களம் அமைத்து வழங்கியுள்ளேன்.

Additional information

Weight 0.5 kg
Author