Description
தமிழ் இலக்கியப்பரப்பில் அண்மைக்கால வரவாக அமைந்தது இலக்கியத் திறனாய்வுக் கலை. எந்த ஓர் இலக்கியத்தையும் முழுமையாகப் படித்துச் சிந்தித்து ஆய்வுசெய்து அதன் நிறைகுறைகளைச் சுட்டி மதிப்பீடு செய்வது இலக்கியத் திறனாய்வுக் கலையாக வளர்ந்துள்ளது. அந்த வகையில் தமிழில் கம்பன் படைப்பான இராமாயணத்துக்கு வேறுபட்ட ஒரு கோணத்தில் அமைந்த திறனாய்வு நூலே கம்பரசம் என்னும் இந்த நூல். கம்பராமாயணத்தில் அமைந்துள்ள
இன்பப் பாடலாகிய அகத்துறையில் அமைந்த காமரசம் ததும்பும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதன் விளக்கத்தைத்
தெளிவுரையாக வரைந்த தன்னுடைய அறிவுத்திறத்தின் துணை கொண்டு அருமையாக வடிக்கப்பட்டுள்ள அகச்சுவை நூலே இந்தக் கம்பரசம். ரசம் என்பதற்கேற்ப பிரிவுகளை டோஸ் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.








Reviews
There are no reviews yet.