Description

மதுரை, டாக்டர் புலவர் வை.சங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர். ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியவர். மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய உரை கேட்டு உற்சாகம் பெறுபவர்கள் பலர். தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
பொதுத்தொண்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தமிழகத்து அரசியல்வாதிகளின் வரிசையில் என்றைக்குமே ‘கர்மவீரர்’ காமராசர் அவர்களுக்குத் தனியிடம் உண்டு, பொதுமக்களின் சேவைக்காகவே தன்னுடைய உடல், பொருள், ஆவியைக் கொடுத்தவர் ‘கர்மவீரர்’ காமராசர் அவர்கள், பள்ளியில் இலவச மதிய சத்துணவுத் திட்டம், நீர்ப் பாசனத் திட்டங்கள், மின் துறை சாதனைகள், தொழில் வளர்ச்சி, கிராமப் புற வளர்ச்சி எனப் பலவற்றைக் காட்டலாம். அவரின் ஆளுமைத் திறத்தை முழுவதுமாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டம் என்ற நோக்கில்தான் முனைவர் வை.சங்கரலிங்கனார் அவர்கள் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் முன்பே ‘எம்.சி.ஆர். 100’, ‘கணித மேதை இராமானுஜம் 100’, ‘பாரதியார் ஆத்திச்சூடிக் கதைகள் 50’ ஆகிய வெற்றி நூல்களைத் தமிழகத்துக்குத் தந்தவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

Additional information

book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “காமராஜர் 100 KAMARAJAR 100”