Availability: In Stock

உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் UYIRTHAL UYIR NINGINAL

120.00

Description

முனைவர் க.மோகன் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்நூல் தொல்காப்பியமும் பேசுகிறது. கருவாச்சி காவியமும் பேசுகிறது. ‘யாழும் பாட்டும் யாவரு மறிவர்’ என்ற தமிழிசையை பொதுவுடைமை ஆக்குகிறது.
தந்தையின் தோள் மீதமர்ந்து திருவிழா பார்க்கும் மகனுக்குத் தந்தை பார்க்கும் காட்சியைவிடச் சில மடங்கு அளவுக்மிகுதியான காட்சி தெரிய வாய்ப்பு உள்ளது. மூலநூலை மட்டும் படிப்பவர்களைவிட மூலநூலோடு சேர்த்து உரையாசிரியர்களின் கருத்தையும் இணைத்துப் படிப்பவர்களுக்குக் கூடுதல் தெளிவு கிடைக்க வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் உரையாசிரியர்கள் திசைதவறவும் கூடும். அந்தச் சூழலில் நமக்குக் கைவிளக்காக இருப்பவர்கள் கட்டுரையாசிரியர்களே. அந்தக் கட்டுரையாசிரியர்களின் உதிரிக் கட்டுரைகளின் வழியாக நாம் வழிதவறிய உரையாசிரியர்களையும் நெறிப்படுத்திக்கொண்டு, மூலநூலைத் தெளிவுபட நன்கு கற்றுக்கொள்ள இயலும்.
ஒரு கட்டுரையாளரின் முக்கியத்துவம் இந்தச் சூழலில்தான் உணரப்படும். அந்த வகையில், ‘யாராலும் புறக்கணிக்க முடியாத கட்டுரையாளர் முனைவர் க.மோகன்’ என்பது, இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வழியாக அறியவருகிறது.

Additional information

book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் UYIRTHAL UYIR NINGINAL”