Description
குமுதவல்லி (பிரதிக்ஷா பாகம் 2) (வரலாற்று நாவல்)
சிலருக்கு வாழ்க்கையில் சில போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. சிலருக்கு வாழ்க்கையே போராட்டமாக அமைந்துவிடுகிறது. அப்படி போராட்டமான வாழ்க்கை அமைந்துவிட்டது சாளுக்கிய சிற்றரசின் இளவரசி பிரதிக்ஷாவுக்கு. எதைக் கண்டாலும் அச்சமும் நடுக்கமும் கொண்ட பெண்ணாக, உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடி வருபவள். மெல்ல மெல்ல நெஞ்சுரமும், வலிமையையும், வீரமும் கொண்டு தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவனை நேருக்கு நேர் நின்று அழித்துவிட்ட கதைதான் பிரக்திக்ஷாவின் வாழ்க்கைக் கதை. தமிழகத்தின் சோழ நாட்டு மருமகளாக, குமுதவல்லியாக, சோழர் படைத்தலைவன் நாயகியாக வந்து கற்றதையும், பெற்றதையும் புகுந்த வீட்டுக்கு பலன் தரவேண்டும் என்ற எண்ணத்தில் சோழர் படையின் உபதலைவியாக தான் பெற்ற அறிவையும் பயிற்சிகளையும் கொண்டு சோழநாட்டுக்கு பகையாக வந்தவரை அடக்கி, அமைதியாக நிலைநாட்ட பேருதவி செய்த கதைதான் இந்தக் குமுதவல்லி.