Description
`தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணரும் இவள் என்று பிறந்தவள் என்று உணர முடியாத தொன்மையுடையவள் நம் தமிழன்னை. இத்தகு தமிழ்மொழி குறித்து ஒரு வரலாற்று நூல் வேண்டும் என்று எண்ணி முதன்முதலாய் தமிழ்மொழி வரலாற்றை உருவாக்கிய பெருமைக்குரியவர் பரிதிமாற் கலைஞர். இவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே `சூரிய நாராயண சாஸ்திரி’ என்னும் வடமொழிப் பெயரை நீக்கிப் பரிதிமாற் கலைஞர் என்று
தனித்தமிழில் சூட்டிய பெருமகனார். உயர்தனிச் செம்மொழி தமிழென்றும் வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும்
உலகிற்கு அறிவித்தவர்.
தமிழ்மொழி வரலாறு என்னும் இந்நூலில் தமிழ் மொழியின் சிறப்பு, அமைப்பு, நூல்களின் வரலாறும், நூலாசிரியர் வரலாறும் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் ஆதி வரலாறு, வடமொழிக் கலப்பு, மூவகைப் பாகுபாடு, ஐவகை இலக்கணம், மொழியின் தோற்றம், சிறப்பியல்பு, நூல்பரப்பு, மொழிச் சீர்திருத்தம் என மொழி வரலாற்றைக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர்.








Reviews
There are no reviews yet.