Description
உலகப் பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறள். இது உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பினை உடையது. இந்நூலுக்குப் பழங்காலம் தொட்டுப் பலர் உரை எழுதியுள்ளனர். இத் திருக்குறளுக்குப் பத்துபேர் எழுதிய உரை உள்ளது என்று ஒரு பழம் பாடல் கூறுகிறது. இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. தருமர் தாமத்தர் நச்சர் ஆகிய மூவரது உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டுமே வந்துள்ளன. இவ் உரைகளுள் சிறப்பான உரையாகக் கருதப்படுவது, பரிமேலழகர் உரை, மணக்குடவர் உரை ஆகியனவாகும். இந்நூல் திருக்குறளுக்கான மணக்குடவர் உரை நூல் ஆகும். இவர் எளிய நடையில் அழகிய தமிழில் உரை எழுதியுள்ளார். இவ்வுரை பொழிப்புரையாகவும் சில இடங்களில் விளக்கமும் கொண்டு அமைந்துள்ளது.







Reviews
There are no reviews yet.