Description
தொன்மையான நம் தமிழ்மொழி பல்வேறு இலக்கிய, இலக்கண வளங்களை உடைய செம்மொழியாகும். இம்மொழியான ஆய்ந்து நம் முன்னோர் இவற்றில் நூல்கள் துறைதோறும் பற்பல. அவற்றை அரிதின் முயன்று கண்டறிந்து வெளிப்படுத்திய பெருமைக்குரியோர் பற்பலராவர், அந்த வகையில் தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து, அவர்களின் வரலாற்றையும் வெளிப்படுத்துவது என்பது மிகவும் அரிதான செயலே எனினும், தொன்மையான பல புலவர்கள் பற்றி ஆய்ந்து, அவர்கள் இயற்றிய நூல்களின்வழி, அவர்கள் குறித்து செய்திகளைத் தொகுத்துரைக்கும் நூல்கள் ஒரு சில எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் நக்கீரரைப் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ள இந்நூலும் அடங்கும்.
சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையின் சில பாடல்களையும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் இரு நூல்களையும் எழுதியவர் நக்கீரர். இவை தவிர, களவியல் உரை எழுதிய நக்கீரர், பதினொன்றாம் திருமுறையில் இணைக்கப்பட்டுள்ள நூல்களை இயற்றிய நக்கீரர் எனவும் கூறப்படுகிறது. இவர்கள் சங்ககால நக்கீரரிலிருந்து வேறுபட்டவரா? அல்லது ஒருவர் தானா? நக்கீரர் குறித்த ஒரு முழுமையான புரிதலை நாம் அடைய இந்நூல் வழிகாட்டுகிறது.





Reviews
There are no reviews yet.