Description

‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’- இந்த இரண்டு தொடர்களும் நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்கு காட்டுவன. குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் ‘குறள்’ என்ற பெயர் ஏற்பட்டாற்போல, நாலடி வெண்பாக்களாலாகிய இந்நூலிற்கும் ‘நாலடி’ என்னும் பெயர் அமைந்தது. ‘ஆர்’ விகுதி சேர, அது நாலடியார் ஆயிற்று. நாலடியார், நாலடி நானூறு, வேளாண் வேதம் எனவெல்லாம் இதனைக் குறிப்பிடுவார்கள்.
கதை எப்படியானாலும், அதன் அமைதி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. வளமும் வண்மையும் பெருகியிருந்த தமிழகத்திலே, கள்ளுண்ணலும், புலால் உண்ணலும், பரத்தையர் உறவும், மற்றுஞ் சில பல பழக்கவழக்கங்களும் நிலவியதைக் கண்ட சமணச் சான்றோர்கள், தவவாழ்வினரான முனிவர்கள், அவற்றை விடுத்தால் தமிழர் சமுதாயம்
எவ்வளவு சிறப்புறும் என்று எண்ணத் தொடங்கினார்கள். அதன் பயனே, சமூக நடைமுறை அமைதிகளாக அவர்கள் ஆக்கிய பெரு நூல்கள் பலவாம். சமணம் இந்நாட்டினின்றும் பேரளவுக்கு மறைந்து விட்டாலும், இந்நூல் தமிழர் மரபியலோடு ஒன்றிக்கலந்து உயர்வுடன் ஒளிபெற்று விளங்குகின்றது.
இத்தகைய ஒப்பற்ற நூலுக்கு பால் இயல் அதிகார முறைமையும், தக்கதோர் உரையும் கண்டவர் பதுமனார். தருமர் மதிவரர் போன்ற பிற சான்றோர்களும் உரை கண்டனர்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

SARATHA PATHIPPAGAM

Book Type

Paperback

ISBN

978-93-94576-25-4

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.