Description
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பன்முகத் தொண்டுகள் வழியே அரிய தமிழ்நூல்களை எழுதி வளம் சேர்த்த பெருமை சமணர்களுக்கு உண்டு. காப்பியங்கள், இலக்கண நூல்கள், சமண சமய நூல்கள், அறநூல்கள், அகராதிகள், சிற்றிலக்கியங்கள் எனப் பல நிலையில் படைப்புகளை இயற்றித் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர். அவர்கள் படைத்திருக்கும் சிற்றிலக்கியங்களுள் ஒன்றுதான் அருங்கலச் செப்பு என்னும் இந்த நூல். இல்லறச் சமணர்களுடைய ஒழுக்கம் குறித்து விளக்குவது இந்த நூல். 180 குறள் வெண்பாக்களைக் கொண்டுள்ளது. இல்லறத்தில் வாழும் சமணர்களுடைய வாழ்க்கை முறையை விளக்குவதால் சிராவகச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இல்லறம் துய்த்தபடித் துறவறம் செல்லும் பதினொரு படிநிலைகளை உரைப்பதாக உள்ளது.
பிராகிருத மொழியில் சமந்தபத்திரர் என்பவர் எழுதிய இரத்தின கரண்டகம் என்னும் நூலின் மொழி பெயர்ப்பே அருங்கலச் செப்பு என்னும் இந்த நூல் என்பது பெரும்பான்மையான சமணப் பெருமக்கள் கருத்தாக உள்ளது. அழகு தமிழில் மொழிபெயர்த்த ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. “திருக்குறளைப் போல் குறள் வெண்பா யாப்பில் அமைந்துள்ள சமணநூல். கடவுள் வாழ்த்து என்பது அருகதேவன் வாழ்த்தாக அமைந்துள்ளது. இந்நூலுக்குப் பழகு தமிழில் பதவுரை, தெளிவுரை என்னும் அமைப்பில் முனைவர். கோ. வெற்றிச்செல்வி அவர்கள் உரையெழுதியுள்ளனார்.







Reviews
There are no reviews yet.