Description
தமிழரைத் தட்டி எழுப்பிய தலைவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவர்.
பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். சொற்பொழிவில் சுவையைக் கூட்டியவர் பேரறிஞர் அண்ணா. உபந்நியாசமாக நெளிந்துகொண்டிருந்த புழுவைச் செவிகுளிரவைக்கும்
தேனிசைச் சொற்பொழிவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. மேடைச் சொற்பொழிவுக்கு மெருகூட்டிய தனைப் போன்று, எழுத்து நடையிலும் எழுச்சியை உண்டாக்கியவர் பேரறிஞர் அண்ணா.
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
என்னும் வள்ளுவரின் கூற்றுக்குச் சான்றாக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா – சிறுகதை, புதினம், நாடகம், தம்பிக்குக் கடிதம் தiலயங்கம், சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். அண்ணாவின் கட்டுரைகளை அருணோதயம், கல்வி நீரோடை, கிளி
நிறம் பெற்ற கழுகு, தேவையற்ற திருப்பணி என்னும் நான்கு தொகுப்புகளாகும்.








Reviews
There are no reviews yet.