Description
ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல். ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர். இவர் ஆச்சாரத்தின் வித்துகளாக நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொல் பேசுதல், எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை, கல்வியோடு வாழ்தல், அறிவுடைமை, ஒப்புரவு ஆற்ற அறிதல், நல்இனத்தாரோடு நட்டல் ஆகிய எட்டு பண்புகளைக் குறிப்பிடுகிறார்.
தற்சிறப்புப்பாயிரம் நீங்கலாக, பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். இந்நூலின் பாக்கள், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி முதலிய இலக்கியங்களின் உரைகளிலும், இலக்கண விளக்கம், நன்னூல், பிரயோக விவேகம் முதலான இலக்கணங்களின் உரைகளிலும், மேற்கோள்களாக வருகின்றன.








Reviews
There are no reviews yet.