Description
கௌதம புத்தரின் வரலாற்றையும், அவர்தம் கொள்கைகளையும் விளக்கும் ஆசிய ஜோதி எனப்படும் நூல், பெருந்துறவு எனும் துணைத்தலைப்புடன், 1832-ஆம் ஆண்டு பிறந்த எட்வின் அர்னால்டு எனும் ஆங்கிலேயக் கவிஞரால் ஆங்கிலத்தில் கவிதை நடையில் எழுதப்பட்டு, சூலை 1879-இல் லண்டனில் வெளியிடப்பட்டது. இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியான ஆண்டின் போது கவிமணி (பி.1876) அவர்களுக்கு மூன்று வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மூல நூலைத் தமிழில் தேசிய விநாயகம் பிள்ளை, ஆசிய ஜோதி(1941) எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல் புத்தர் அவதாரம் என்ற தலைப்பில் இருந்து 9 தலைப்புகளைக் கொண்டிருக்கிறது.







Reviews
There are no reviews yet.