Description
ஔவையார் ஆத்திசூடி : தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
புதிய ஆத்திசூடி ஒரு தமிழ் நீதி நூல் ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியைப் போன்றே நல்ல அறிவுரைகளுடன் சுப்பிரமணிய பாரதியாரால் 20-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆத்திசூடியைப் போன்றே இதன் அமைப்பு உள்ளது. மொத்தம் 111 அறிவுரைகள் உள்ளன. இவை எளிதில் மனப்பாடம் செய்து கொள்ளும் சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்துள்ளன.
பாரதிதாசன் ஆத்திசூடி என்பது 1947 இல் வெளியான, முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட ஒரு நீதி நூல் ஆகும். இது ஒளவையாரின் ஆத்திசூடியைப் பின்பற்றி, உலகின் அமைதி மற்றும் பொதுவுடைமை போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறது. பாரதிதாசனே இதற்கு உரை எழுதியுள்ளார்.








Reviews
There are no reviews yet.