Description
செம்மொழித் தமிழ் நூல்களுள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்
இன்னா நாற்பதும் ஒன்று. இன்னா நாற்பது என்னும் இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட 41 பாடல்களைக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்தில் மும்மூர்த்திகளையும் வணங்குவதால் இதன் ஆசிரியர் வைதிக சமயத்தவர் எனலாம். ஒவ்வொரு பாடலிலும் இன்னா என்னும் சொல் ஒவ்வொரு அடியிலும் அமைந்திருப்பதனால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலிலும் துன்பந்தரக்கூடிய நான்கு செய்திகள் உரைக்கப்படுவதைக் காணலாம்.
இந்நூலை எழுதியவர் கபிலர். “செந்தண்மை பூண்ட அந்தணாளர் கபிலர்” என்றழைக்கப்படுகிறார். ஒரே கருத்து மீண்டும் வருவது வேறு வடிவத்தில் அமைந்திருப்பது, இன்னா என்பது இனிமையன்று என்பது போன்ற நிலைகளில் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இனியவை நாற்பதிலுள்ள இனியவை தொடர்பான கருத்துகள் இன்னா நாற்பதில் இன்னா என முரண் நிலையில் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இந்நூற்குப் பழைய பொழிப்புரை ஒன்று உள்ளது. ந.மு.வேங்கடசாமி எழுதிய உரையும் உள்ளது. இப்பொழுது எளிய நிலையில் எல்லாருக்கும் எளிதில் திரண்ட பொருள்கள் அடங்கிய கருத்துரையினை முனைவர் குமரிச்செழியன் எழுதியுள்ளார்.







Reviews
There are no reviews yet.