Description
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு (வரலாற்று நாவல்)
காலத்தின் ஓட்டத்தில் மனிதன் தன்னுடைய இருப்பை எச்சங்களாய் சில மிச்சத்தை விட்டுச் சென்றான். அவனுடைய ஆய்வுகளே அந்த சமூகத்தின் பழமையையும், பெருமையையும், இந்த நாகரீகத்தின் உயர்வையும் உலகிற்கு கூறுவதாய் அமைகிறது. ஓராயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழ் சமூகத்தின் நாகரீகத்தின் உன்னதத்தையும், எந்திர உலகு வியக்கும் அதிநுட்ப கட்டிட கலையையும் உலகிற்கு இன்றளவும் பறைசாற்றிடும் “இராஜராஜேச்சரம்” எனும் திருக்கற்றளியான பெருவுடையார் ஆலயத்தின் குடமுழுக்கை உடையார் ஸ்ரீ இராஜராஜர் எவ்வாறு நடத்தியிருப்பார் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே “இராஜராஜேச்சரம் குடமுழுக்கு”.