Description
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் படைத்த பைந்தமிழ்ப் படைப்புகளில் இருண்டவீடு என்னும் குறுங்காப்பியமும் ஒன்று.
விளக்கில்லாத வீடு இருண்ட வீடு என்பது பாமரர் வழக்கு. அப்படியென்றால் வெளிச்சத்தை நல்கும் விளக்கு எது என்னும் வினா எழக்கூடும். அதற்கு விடையாகத்தான் இந்த நூல் அமைந்துள்ளது. கல்வியை விளக்கு என்னும் கருத்தின் அடிப்படையில் இக்காப்பியம் அமைந்துள்ளது. கல்வியின் பெருமையை இனிது விளக்குகிறது. கல்வியில்லாத பெண்ணைக் களர்நிலம் என்று சொன்னதைப் போல கல்வி ஒளி ஏற்றப்படாத மனம் இருண்ட வீட்டிற்கு ஒப்பானது.
கல்லாதார் மனம் இருண்ட வீடு. கல்வி இல்லாத மனையாளால் கணவன் உள்ளம் இருண்டது. கல்வியில்லா மகனால் வீடு இருண்டு அழிந்தது. இந்த நீதியை உணர்த்தும் காப்பியமே `இருண்ட வீடு’ என்பது.








Reviews
There are no reviews yet.