Description
பாரதிதாசன் தம் எழுச்சிமிக்க எழுத்தினால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் போற்றப்பட்டவர். இவர்தம் நாடகப் படைப்பாக விளங்குவது இருண்ட வீடு. கல்வி அறிவில்லாத குடும்பமே இருண்ட வீடு என்று இந்நாடகம் உரைக்கின்றது. கல்வி இல்லை என்றால் அறிவு, ஒழுக்கம் என்று எதுவும் கிடையாது. அக்குடும்பம் அடையத்தக்கது கீழானநிலை என்பதை இந்நூல் காட்டுகிறது. மனித வாழ்க்கையை அறிவினால் மேன்மையுறச் செய்வத கல்வியே. “கல்வி இல்லான் கண்ணிலான்” என்று கல்வியின் சிறப்பை இந்நூலில் கூறியுள்ளார். கல்வி இல்லாத வீட்டினை, “எல்லா நலமும் ஈந்திடும் கல்வி இல்லா வீட்டை இருண்ட வீடென்க” என்றும் “அறிவே கல்வியாம்! அறிவிலாக் குடும்பம் நெறி காணாது நின்றபடி விழும்” என்றும் கூறுகிறார்.








Reviews
There are no reviews yet.