Description

இளவேணியின் கனவு (வரலாற்று நாவல்)

தமிழகத்தின் சரித்திர நவீனம் படைக்க முயன்றோருள் பெரும்பாலோர் பல்லவ சோழ பாண்டி நாட்டு வரலாறுகளையே அறிந்து ஆராய்ந்து பல நூல்களைப் படைக்கின்றனர்.  சேரநாட்டு அரசர்கள் வரலாற்றை இவ்வாறு காண முயலவில்லை. இதற்குக் காரணம் சங்ககால இலக்கியங்கள் சேரநாட்டு அரசர்களின் புகழைப் போற்றுகின்றனவே தவிர கல்வெட்டுகளும் சாசனங்களும் செப்புப் பட்டயங்களும் அதிகமாகக் காணப்படாமையே ஆகும்.

சேர அரசர்களின் வரிசையில் புகழ்பெற்ற அரசன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவரின் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் அவன் மேல் தீராக் காதல் கொண்ட இளவேணியின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் கற்பனையோடு சொல்கிறது இந்த நவீனம்.