Description
உத்தம சோழனின் உத்தம மைந்தன் (வரலாற்று நாவல் )
வரலாற்றில் பல அரசர்கள் வாழ்ந்து இருந்தாலும் இன்றளவும் வரலாற்று நாயகனாகப் போற்றப்படுபவர் அருள்மொழிவர்மர் எனும் இயற்பெயர் கொண்ட இராஜராஜ சோழன் தான்.
சோழ சாம்ராஜ்யத்தைப் பதினைந்து ஆண்டுகள் ஒரு மன்னன் ஆட்சி புரிந்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் அறிவும் ஆற்றலும் மிக்கவராகத் தான் இருந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கதையின் போக்கை அமைத்து இருக்கிறேன்.
மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழரின் மகனாக இருந்திருந்தால் அவரது வாழ்க்கை எப்படி அமைந்து இருக்கும் என்ற கற்பனையே இந்த ‘உத்தம சோழனின் உத்தம மைந்தன்’ புதினம் .