Description
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண்’ என்ற மகாகவி பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழு மூலம் மகளிர் மேம்பாட்டுக்காக உழைத்த “சின்னபிள்ளை’யிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ‘பச்சேந்திரி’ வரை அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்த பெண்சிங்கங்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணலாம். | என்னதான் பெண்ணின் பெருமையை ஆண்கள் நிறைய எழுதினாலும் பெண்ணால் மட்டுமே எழுத்தில் உண்மையான, இயல்பான பெண்ணினத்தின் உணர்வைக் கொண்டுவர முடியும். அன்றும் இன்றும் என்றும் சேயாய், சகோதிரியாய், தாரமாய், தாயாய், இம்மண்ணின் தங்கமாய் வாழும் மங்கையர் குலத்தைப் பற்றி மணி மணியாய் வடித்துள்ளார் எழுத்தாளர் திருமதி ந.பிரியா சபாபதி.
‘தங்களைப் பிறர் புகழே வேண்டும், பாராட்ட வேண்டும்’ என்பதற்காக யாரும் சாதனைகளைப் புரிவதில்லை. தம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளவே அவர்கள் சாதனைகளைச் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொண்டால், நிச்சயமாக நீங்களும் உங்களின் வாழ்க்கையை வேறொரு தளத்தில் அர்த்தப்படுத்திக்கொள்ள இயலும். அதற்காகவே இந்த ‘உமென் எம்பவர்மெண்ட்’ புத்தகம்.
Reviews
There are no reviews yet.