Description
உழவுத் தொழிலின் மேன்மையை எடுத்துரைக்கும் நூல். காவிரி ஆறு பாயும் சோழ வளநாட்டைக் களமாகக் கொண்டு அங்குள்ள வேளாளர்களின் சிறப்பையும், அவர்கள் மேற்கொண்டுள்ள உழவுத் தொழிலின் உயர்வையும் எடுத்துக் கூறுகிறார் இந்நூலாசிரியரான கம்பர். இவர் கம்பராமாயணம் எனும் மாபெரும் காவியத்தைப்
படைத்த பெருமைக்குரியவர்.
இந்நூலில் உழவுத் தொழிலுக்குப் பயன்படும் ஏர், கலப்பை, இவற்றை இணைக்கும் ஊற்றாணி, நுகந்தடி, நுகத்தொளை,
நுகத்தாணி முதலான பல கருவிகளையும், அவற்றின் பயன் மற்றும் பெருமைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். வரப்பு
அமைத்தல், பரம்படித்தல், விதைகளை முளைக்கச் செய்தல், களை எடுத்தல், நாற்றுப் பறித்தல் முதலான உழவுத் தொழிலின் செயல்பாடுகளோடு உழவுத் தொழிலின் சிறப்பையும், வேளாளரின் மேன்மையையும் என உழவின் அனைத்துப் பெருமைகளையும் அழகுற வடித்துள்ளார்.








Reviews
There are no reviews yet.