Description
ஏலாதி சூர்ணம் என்பது ஒரு மருந்து. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு சரக்குகளைக் கொண்டு செய்யும் மருந்து அது பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய ஏலாதி என்னும் நூலுக்கு அந்த ஏலாதி சூர்ணத்தின் பெயரை அதன் ஆசிரியர் அமைத்திருக்கிறார். ஏலாதி என்னும் மருந்தில் ஆறு பண்டங்கள் அமைந்திருப்பது போல, ஒவ்வொரு பாட்டிலும் ஆறு கருத்துக்களை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நூலை இயற்றினார் என்று தோன்றுகிறது. இதனை இயற்றியவர் கணி மேதாவியார் என்னும புலவர். இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். இந்நூல் 1881 – ஏ.டி.சபாபதிப்பிள்ளை அவர்களின் உரைநூலும்,1887-ல் புஷ்பரக செட்டியாரால் பதிப்பிக்கப்பட்ட ஏலாதி, 1915-ல் கோ. இராஜகோபாலப்பிள்ளை அவர்கள் இயற்றிய ஏலாதி உரைநூல், இந்த உரைநூலை அடிப்படையாகக் கொண்டு காலத்துக் கேற்ற எளிமை கருதி எமது ஆசிரியர்குழு எளியவுரை வழங்கியுள்ளது.








Reviews
There are no reviews yet.