Description
உலகில் வீறார்ந்த வாழ்க்கைதனை மேற்கொண்ட மக்கள் வாழ்ந்த பண்டைநாடுகள் சிலவற்றுள் தமிழகமும் ஒன்று. பண்டைத் தமிழர் வாழ்க்கையைப் பற்றி ஆராயும் போது சில வாழ்க்கைப் பண்புகள் மேலோங்கி இருந்ததை அறிய முடிகிறது.
சங்க நூல்கள் காட்டும் சங்ககாலத் தமிழர் வாழ்க்கையையும் இக்கால நூல்கள் காட்டும் தமிழர் வாழ்க்கையையும் காணும் போது சில உண்மைகள் புலனாகும்.
மக்கட் சமுதாயத்தின் வரலாற்றைக் கூறிக்கொண்டு வரும்போது தான் மன்னர்களை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன.
இந்த வகையிலேயே கடல் கொண்ட காவியம் எழுதப் பெற்றுள்ளது. சமுதாயச் சூழ்நிலை, மன்னர்களின் அருஞ்செயல்கள் இரண்டுமே வெறும் கற்பனையில் உருவானதுமல்ல. உண்மைச் சம்பவங்களின் தொகுப்புமல்ல, உண்மையும், அழகும் பொருந்த கலந்ததன் ஆக்கமே இந்நூல்.