Description
கடல் நிலா (வரலாற்று நாவல் )
இந்த நாவலை எழுத முற்பட்ட போது நாவலின் கதாநாயகனைப் பற்றி வரலாற்று நூல்களில் ஒரே ஒரு வரிதான் இருந்தது. அது அவனது பெயர். எல்லா வரலாற்று நூல்களிலும் அதை தவிர எதுவுமில்லை.
சாதாரணமாக வெளிச்சத்திற்கு வராத மன்னர்களைப் பற்றி ஆராய்வதும் அதை நாவலாக்குவதுமே சமீப காலமாக எனது பணியாக இருந்து வந்தன.
இந்நாவல் நான் விரும்பியவாறு எழுத்துகளால் எழுதப்பட்ட கதையல்ல. எழுத்துகள் தாம் விரும்பியவாறு எழுதிக்கொண்ட கதை இது.








