Description

களப்பிர அரசி காஞ்சனா தேவி (வரலாற்று நாவல் )

ஆயிரத்து எழுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கால கட்டத்தில் கி.பி.மூன்று முதல் கி.பி.ஆறாம் நூற்றாண்டு முடிய ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் நம் தமிழ் மொழி பேசும் இனத்தவரல்லாத, வேறு ஒரு இனத்தைச் சேர்ந்த மன்னர்களால் நம் தமிழ்நாடு ஆளப்பட்டிருக்கிறது. அவர்கள் களப்பாள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று வரலாற்று அறிஞர்கள் உரிய ஆதாரங்களைக் காட்டி வெளிப்படுத்தினார்கள்.

களப்பிரர்களின் ஆட்சி அன்னியர்களின் ஆட்சி என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் காலத்தில் நிரந்தரமான நன்மைகள் பல ஏற்ப்பட்டன. நன்மைகள் பல இருப்பினும் கி.பி.575 இல் களப்பிரர்களின் ஆட்சிக்கு பாண்டிய நாட்டில் முடிவு ஏற்ப்பட்டது. கடுங்கோன் என்ற பாண்டிய மன்னனே தமிழ்நாட்டில் இத்தகைய செயற்கருஞ்செயலைச் செய்து முடித்துக் காலத்தால் அழியாத புகழைப் பெற்றான். இவனுடைய இந்த வீர வரலாறே ‘களப்பிர அரசி காஞ்சனா தேவி’ என்ற இந்த வரலாற்றுப் புதினத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

Additional information

Weight 0.409 kg
Author

Book Type

Paperback

Publication

SEETHAI PATHIPPAGAM

ISBN

978-93-80220-73-4