Description
சங்க இலக்கியங்களில் அறிமுக நிலையில் இருந்த சிவன், திருமால் வழிபாட்டு முறைகள், சங்கம் மருவிய காலத்தின் இறுதியில் இரு பெரும் பக்தி இயக்கமாக வளர்ந்தன. சிவனை வழிபட்ட அடியவர்கள் நாயன்மார்கள் என்றும், திருமாலை வணங்கிய தொண்டர்கள் ஆழ்வார்கள் என்றும் வழங்கப்பட்டனர். சிவபெருமானை வணங்கிய 63 நாயன்மார்களுள் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மூவருள் ஒருவரும், முதன்மையானவருமாக விளங்குபவர் காரைக்கால் அம்மையார். கைலாய மலைக்குக் கைகளின் மூலமாகவே நடந்து சென்ற போது சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டதாலும், இவர் காரைக்காலில் பிறந்தவர் என்பதனாலும் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் மீது தீராத பற்றுக் கொண்ட இவர், இசைத் தமிழால் சிவபெருமானைப் பாடித் துதித்தார். இவரது படைப்புகள் திருவலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், அற்புதத்திருவந்தாதி, இரட்டை மணிமாலை என்று வழங்கப்பெறுகின்றன. இந்நூல் காரைக்கால் அம்மையாரின் வரலாற்றைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்து, அவரது படைப்புகளையும் அவற்றுக்கான தெளிவுரையையும் கொண்டு அமைந்துள்ளது.








Reviews
There are no reviews yet.