Description
பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்கள் சிறந்த பண்புகளோடும் பொது அறிவோடும், அறிவியல் சிந்தனைகளோடும் வளர்க்கப்பட வேண்டும். இதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து, பொறுப்புடன் நடந்து, மாணவர்களிடம் நேர்மறை எண்ணங்கள் உருவாக உதவ வேண்டும்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் நாளிதழ்கள், வார, மாத இதழ்களைத் தவறாமல் வாசிக்கவேண்டும். தாங்கள் பொது நூலகத்தில் தேடிப்பிடித்து படித்த நல்ல நூல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ‘எனக்குப் பிடித்த கருத்துகள்’ எனத் தனியே ஒரு குறிப்பேட்டில் எழுதிவர வேண்டும். மேலும் தங்களுக்குப் பிடித்த முன்மாதிரித் தலைவர்கள் மற்றும் அவர்களால் ஈர்க்கப்பட்ட விதம் பற்றியும் எழுதிவர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்களின் எண்ணங்கள் உயர்வடையும். இவ்வகையில், பள்ளி மாணவர்கள் பண்பிலும் அறிவிலும் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பல அறிவியல் உண்மைகளையும், பொது அறிவுத் தகவல்களையும் ஓரங்க நாடகங்களின் வழி வெளிப்படுத்தி, அவற்றைத் தொகுத்து மேலைச்சிதறல் கோமகன் (மேலை ந.நீலமேகம்) அவர்கள் ‘காலத்தை வென்றவர்கள்’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார்.







Reviews
There are no reviews yet.