Description
தமிழில் செய்யுள்களே அனைத்தும் செய்யுள்களுக்கு மூலமாக விளங்கியவை நாட்டுப்புறப் பாடல்களே. தொல்காப்பியர் வண்ணம் என்று குறிப்பிடுவதே பின்பு – சந்தம் – சிந்து என்று மலர்ந்தது. திருப்புகழ், பள்ளு, பரணி, குறவஞ்சி, அம்மானை போன்றவையும் இசையுடன் பாடப்பெறுபவையே.
காவடிச் சிந்து என்னும் இந்த வகையை உண்டாக்கியப் புதுமை செய்தவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் என்பவரே. இவர்க்கு முன்பு இந்த வடிவத்திற் பாடல்களை யாருமே படைக்கவில்லை.
வெண்பா வடிவில் – குறள் வெண்பாவைப் படைத்துத் திருவள்ளுவர் நிலைத்து நின்றதனைப் போல் காவடிச் சிந்தினைப்
படைத்து அண்ணாமலை ரெட்டியார் நிலைத்து நின்று விட்டார்.








Reviews
There are no reviews yet.