Description
பாரத மண்ணின் பண்பாட்டுத் தளத்தில் உருவான இதிகாசங்கள் இரண்டு. ஒன்று இராமன் கதை சொல்லும் இராமாயணம். மற்றொன்று கண்ணன் கதை சொல்லும் மகாபாரதம். அந்த மகாபாரதத்தில் அமைந்த ஒரு சிறு பகுதியே பகவத்கீதை. அதனை மகாபாரதம் என்னும் ஐந்தாம் வேதத்தில் அமைந்திருக்கும் ஞான காண்டம் என்பர். மகாபாரதப் போரின்போது போர்க்களத்தில் கண்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களே பகவத்கீதையாக மலர்ந்துள்ளது. இப்பகுதிக்கு மகான்கள் காலந்தோறும் பல விளக்க உரைகளை வழங்கியுள்ளனர்.
அவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளன. அந்தப் பகவத்கீதை குறித்துப் பாலகங்காதரத்
திலகர், சுவாமி சிவானந்தர், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் ஆகிய இவர்கள் கூறியிருக்கும் அனுபவ உரைகளும்,
பாரதியார் தனியாக எழுதிய வேதரிஷிகளின் கவிதை என்ற பட்டறிவு ஞானமும் தொகுக்கப் பெற்றறு “கீதை என்ன
சொல்கிறது” என்னும் இந்த நூலாக மலர்ந்துள்ளது.







Reviews
There are no reviews yet.