Description
குறிஞ்சி மலர் (சமூக நாவல்)
” பெண்ணிற் பெருதக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் “
– தமிழ் மறை
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஞானமும் மோனமூம், அன்பும் அருளும், செம்மையும் சீர்மையும் மேலோங்கிக் கவியும் காவியமும் வீறுபெற்று வாழ்ந்த காலத்தில் ஒலித்த குரல் இது ! தமிழ் பெண் எப்படி இருக்க வேண்டுமென்று இலக்கணம் வகுக்கிற குரல். கோபுரம் போல் உயர்ந்து, வானம் போல் பரந்து, மதிகடல் போல் ஆழ்ந்த சிறப்புடையது தமிழ்ப் பெண் குலம். தமிழ்ப் பெண்குலத்தின் வளை ஒலிக்கும் கைகளில் தான் வீரமும், ஈரமும், வெற்றியும், வாழ்வும் பிறந்து வளர்ந்திருக்கின்றன. அக்கைகளில் வளையோடு தமிழும் வாழ்ந்தது. தமிழோடு தமிழ்ப் பண்பும் வாழ்ந்தது. தமிழ் பண்போடு குடியும் வளர்ந்தது.
அடுத்து வரும் புதிய தலைமுறையினருக்கு எழுத வேண்டிய புதிய சரித்திரத்தில் ஓர் லட்சிய பெண் நா.பாவின் கனவிலும் கற்பனையிலும் தோன்றிய பெண்.