Description

பாரதிதாசன் கட்டிய
இருண்டவீட்டிற்கு
திறவுகோல்
செய்திருக்கிறேன்.’

இதை பயன்படுத்துபவன் கூட விடிந்த வீட்டுக்காரனாய் இருக்க வேண்டுமென்றுதான், இருண்ட வீட்டிற்குள் நான் இருந்து உனக்காக விழித்துக் கொண்டிருக்கிறேன். என் விடியல் ஒவ்வொன்றிலும், வேதனைகளும், சோதனைகளும் போர் நடத்தியுள்ளது. என்னோடு மண்ணாங்கட்டியாய் இருக்கும் மனங்களில் இந்த வேர் நுழைத்து வெளிச்சத்தை தளிர் விடுகிறேன். (யுகங்களை கடந்து பழைய வீடு என்பதால், என் சுகங்களனைத்தும் கலந்து மெருகேற்றம் செய்து அந்தத் துரு துடைப்போடு உள்ளே நான் நுழைந்து இருட்டுக்குள் திசையறியாத கண்களின் தொலைநோக்குப்
குவிலென்ஸ் மூக்குக் கண்ணாடியாக உனக்கு கொடுத்திருக்கிறேன்.
நீ பார்க்கும் தொலைவில்தான் என் படைப்பின் பயணம், தீர்மாணிக்கப்படும்