Description
நீதி நூல்கள் பல. அடிக்கடி மக்களாற் பேசப்படுவன அவ்வையாரின் “கொன்றைவேந்தன்” நூலும்; “மூதுரை”யும்; உலகநாதரால் இயற்றப்பெற்ற “உலக நீதி”யும் ஆகும். இந்த மூன்று நீதி நூல்களும் அமைந்த நூல் இது.
கொன்றை வேந்தன்: குறைந்த அடிகளில் அமைந்து நிறைந்த பொருள்களைத் தருவது என்று அறிஞரால் பாராட்டப் பெறுவது திருக்குறள். அதனைப் போன்றே குறைந்த அடியிற் சிறந்த பொருளை எளிய முறையில் நீதியைத் தருவது “கொன்றை வேந்தன்”.
மூதுரை: மூதுரையை வாக்குண்டாம் என்றும் வழங்குவர். இது முப்பது வெண்பாக்களால் ஆன நூல். பல்வேறு நீதிகளைப்
புகட்டுவது இது.
உலக நீதி: இன்னின்னவற்றைச் செய்வீர்; இன்னின்ன நன்மைகள் கிடைக்கும் என்று உடன்பாடாகக் கூறுவதற்கு மாறாக, இன்னின்னவற்றைச் செய்யாதீர் என்று எதிர்மறையாகக் கூறும் நூல் இது. “வேண்டா” என்னும் எதிர்மறைச் சொல்லை
“வேண்டாம்” என்று தவறாகப் பயன்படுத்தி அனைவரையும் தவறாக எழுதவைத்தவரும் இவரே.
இந்த மூன்று நூல்களுள் முதல் இரண்டு நூல்களும் தொல்காப்பிய உரையாசிரியரால் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன
என்பது இந்நூல்களுக்குரிய சிறப்பாகும்.







Reviews
There are no reviews yet.