Description
ம. சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) ஒரு தமிழ்நாட்டு பொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி”எனப் போற்றப்படுகிறார்.
- இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
- உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
- தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 இல் உழப்பாளர் உழவர் கட்சியைத் தொடங்கினார்.
- 1925 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
- இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
Reviews
There are no reviews yet.