Description
சிங்களத்துப் புயல் (வரலாற்று நாவல்)
சேர, சோழ, பாண்டியர்கள் தமிழகத்தின் அண்டை நாடான சிங்களத்தைப் போரில் வென்று தமிழராட்சியை நிறுவிய சந்தர்ப்பங்கள் பண்டைய சரித்திரத்தில் நிரம்பவே இருக்கின்றன. ஆனால் சிங்களவர் தமிழ்நாட்டின் மீது படியெடுத்து வந்து போரிட்டுத் தமிழக ஆட்சியைக் கைப்பற்றியதாகவோ ஆண்டதாகவோ சரித்திரத்தில் குறிப்படப்பட்டுள்ளதாக ஒரே காலக்கட்டத்தை தான் சொல்ல முடியும். அது கி.பி. 1166 – ஆம் ஆண்டு. அதில்கூட சிங்களவர் தமிழகம் முழுவதையும் கைப்பற்றிவிடவில்லை. பாண்டிய ராஜ்யத்தை மட்டுமே கைப்பற்றினார்கள்.
கி.பி.1166 முதல் 1191 வரையிலான 25 ஆண்டுகளில் சோழர், சிங்களர், பாண்டியர் ஆகியோரின் அரசியலில் புயல் வீசி அலைக் கழித்தது. இதை மூன்று பகுதிகளாகப் பிரித்தால் முதல் பகுதி சிங்களத்துப் புயல், இரண்டாம் பகுதி கன்னிமாடம், இரண்டும் மூன்றும் கலந்த பகுதி சோழ நிலா.
Reviews
There are no reviews yet.