Description
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது.
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும், மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குக் கண்டங்கத்தரி, சிறுமல்லி, சிறுவழுதுணை, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து. இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது.








Reviews
There are no reviews yet.