Description
சிலை எழுபது பண்டைத் தமிழர்களான வன்னியர்களைச் சிறப்பித்துப் பாடுகிறது. பாயிரம் தவிர எழுபது பாடல்களால் இயன்ற இந்நூல் வன்னிய மன்னர்களின் வில் என்னும் படைக்கலத்தின் சிறப்பில் தொடங்கி அவர்களது பிற படைக்
கருவிகளையும் அரசாட்சிச் சிறப்புகளையும் விரிவான களத்தின் நின்று பேசுகிறது. கருணாகர சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு வன்னிய மன்னர்களையும், வன்னியர்குலச் சிறப்பையும் போற்றிப் புகழ்ந்து பாடியதற்காகத்
தான் பெற்ற வெகுமதிகளைக் கம்பர் சிலை எழுபது இலக்கியத்தில் அறுபத்து எட்டாம் பாடலில் குறிப்பிடுகிறார். ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன் கம்பரால் இயற்றப்பட்ட இந்நூல் அதிகமான கற்பனைகளும் அலங்காரங்களும் இன்றி இயல்பு நவிற்சியில் உள்ளதை உள்ளவாறே கூறும் போக்கில் சிறந்து விளங்குகிறது.







Reviews
There are no reviews yet.